சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனா?... பல ஆண்டுகளுக்குப் பிறகு டோனி போட்ட பேஸ்புக் பதிவு..

By 
cskmsd

இந்திய அணியில் 2004 ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகமானார் தோனி. தன்னுடைய திறமையான இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தி 2007 ஆம் ஆண்டே இந்திய டி 20 அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் படிப்படியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியையும் பெற்று இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார்.

2007 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் ஆகிய கோப்பைகளை அவர் தலைமையில் இந்திய அணி வென்றது. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் 20 நாட்களில் ஐபிஎல் 2024 தொடங்க உள்ள நிலையில் தோனி தன்னுடைய முகநூலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில் “புதிய சீசனுக்காக காத்திருக்க முடியவில்லை. புதிய பொறுப்பு. மேலும் அப்டேட்களுக்கு காத்திருங்கள்” எனக் கூறியுள்ளார். இதனால் சி எஸ் கே அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படலாம் என பேச்சுகள் எழுந்துள்ளன. தோனிக்கு அணியில் வேறு ஏதேனும் புதிய பொறுப்புகள் அளிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருதத் தொடங்கியுள்ளனர்.

Share this story