சிஎஸ்கே அணியில் பிராவோவுக்கு மாற்று வீரர் பதிரனா சரியான தேர்வா? : இர்பான் பதான் பதில்

By 
irban

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் மதீஷா பதிரனா. இலங்கையை சேர்ந்த இவர் 8 ஆட்டத்தில் விளையாடி 13 விக்கெட் கைப்பற்றி உள்ளார். டெத் ஓவர் என்று அழைக்கப்படும் கடைசி கட்ட ஓவர்களில் இவர் மிகவும் சிறப்பாக பந்து வீசுகிறார்.

இந்நிலையில் சி.எஸ்.கே. அணியில் பிராவோவுக்கு சரியான மாற்று வீரர் பதிரனா என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

ஒவ்வொரு அணியும் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பவுலர்களை எதிர்நோக்குகிறது. சி.எஸ்.கே. அணியில் பதிரனா இருக்கிறார். பிராவோவுக்கு சரியான மாற்று வீரர் பதிரனா ஆவார். அவர் மிகவும் நேர்த்தியாக பந்து வீசுகிறார். இவ்வாறு இர்பான் பதான் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் முதல் 3 சீசனிலும் பிராவோ மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். 2011-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார். கடந்த ஆண்டு வரை அவர் விளையாடி வந்தார். இந்த முறை ஓய்வு பெற்றார்.

சி.எஸ்.கே. அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அவர் தற்போது இருக்கிறார். டெத் ஓவரில் பந்து வீசுவதில் பிராவோ கெட்டிக்காரர். இதனால் தான் அவருக்கு சரியான மாற்று வீரராக சி.எஸ்.கே. அணி பதிரனாவை தேர்வு செய்துள்ளதாக இர்பான் பதான் கூறியுள்ளார்.

பிராவோ 183 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தில் உள்ளார். இந்த சீசனில் தான் யசுவேந்திர சாஹல் அவரது சாதனையை முறியடித்து 187 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

 

Share this story