ராகுல் டிராவிட்டின் பதவி பறிக்கப்படுகிறதா? நீட்டிக்கப்படுகிறதா?: பிசிசிஐ அறிவிப்பு வெளியீடு..

By 
dravid3

இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். 

ஆனால் அவர் தலைமையில் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்ல இருந்த வாய்ப்பைத்  தவறவிட்டது.

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரோடு டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில் தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு வி வி எஸ் லஷ்மன் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் இப்போது ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லபப்டுகிறது. அதன்படி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் டிராவிட் இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கவேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
 
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

Share this story