ஐஎஸ்எல் மிரட்டல் : கேரளாவை வீழ்த்தி, சென்னையின் வெற்றி இன்று தொடருமா? 

ISL threat Will Chennai's victory over Kerala continue today

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி.- கேரளா அணிகள் மோதுகின்றன.

8-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்துப் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. 

இதில் நடப்பு சாம்பியன் மும்பை, சென்னை, மோகன்பகான் உள்பட 11 அணிகள் பங்கேற்றுள்ளன.

இன்று நடைபெறும் ஆட்டத்தில், 2 முறை சாம்பியனான (2015, 2018)சென்னையின் எப்.சி.- கேரளா அணிகள் மோதுகின்றன. 

சென்னை அணி இதுவரை விளையாடிய 6 போட்டியில் 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என 11 புள்ளிகள் பெற்றுள்ளது.

கடந்த ஆட்டத்தில், அந்த அணி ஒடிசாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 

சென்னை அணியின் வெற்றி இன்றும் தொடருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

கேரளா அணி, இதுவரை விளையாடிய 6 போட்டியில் 2 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி என 9 புள்ளிகளுடன் உள்ளது. 

கடந்த ஆட்டத்தில், அந்த அணி மும்பை அணியை வீழ்த்தியுள்ளது.

Share this story