இந்திய அணிக்கு 'இவர்தான்' பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் : கவாஸ்கர் கணிப்பு

gavaskar2

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நாதன் லயனை விட, பேட் கம்மின்ஸ் தான் அச்சுறுத்தலாக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நாதன் லியோனை விட வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தான் ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பவராக இருப்பார். கம்மின்ஸ் முதன் முதலில் 5 விக்கெட் ஹவுல் எடுத்தது ஆசிய கண்டத்தில் தான். லியோன் ஒரு டாப் பவுலர் தான். எப்போதுமே அச்சுறுத்தல் தருபவர்.

ஆனால் இந்திய மண்ணில் கம்மின்ஸ் போன்ற அட்டகாச பவுலர் தான் எதிர்பார்க்காத தாக்கத்தை ஏற்படுத்துவார். அதனை கடந்த காலங்களில் பார்த்திருப்போம். ஆஸ்திரேலிய அணி இத்தனை நாட்களாக வெற்றிகரமாக இருக்கிறது என்றால், அவர்களின் வேகப்பந்துவீச்சாளர்கள் செய்யும் பணிகள் தான் காரணம்.

ஜோஸ் ஹாசல்வுட் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் கம்மின்ஸை மட்டும் எப்படியாவது சமாளித்துவிட்டால், இந்தியாவுக்கு நல்லது என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். கிரிக்கெட்டை பொறுத்தவரை இரு அணிகளும் அற்புதமான அணிகள். யார் வெற்றி பெறுவார்கள் என கணிப்பது கடினம். ஆனால் உள்ளூர் அணியை பொறுத்தவரை ரசிகர்கள் ஆதரவு, பிட்ச் தன்மை, வானிலை நிலவரம் ஆகியவற்றை எளிதாக கணிக்க முடியும்.

எனவே உள்ளூர் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. வெள்ளை பந்து கிரிக்கெட்டில் குல்தீப் யாதவின் ஆட்டம் சமீப காலத்தில் மிகச்சிறப்பாக உள்ளது. குல்தீப் யாதவ் கேப்டனுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளார். அவர் ஆட்டத்தை மாற்றக் கூடியவராக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story