ஜடேஜாவிற்கு 25 சதவீதம் அபராதம் விதிப்பு : ஏன் தெரியுமா?

jadeja3

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், போட்டியின் முதல் நாளில் ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் பேசிக்கொண்டிருந்தபோது, பந்தை வைத்திருந்த ஜடேஜா, தனது விரலில் ஏதோ ஒன்றை தேய்த்தார். முகமது சிராஜிடம் இருந்து அதனை ஜடேஜா வாங்கி தனது விரலில் தேய்ப்பது வீடியோவின் மூலம் தெரிந்தது.

ஜடேஜா ஒருவகை கிரீமை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக இதனை ஆஸ்திரேலிய மீடியாக்கள் தெரிவித்தன. ஆஸ்திரேலிய மீடியாக்களின் கருத்தை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து அணி நிர்வாகம் கூறுகையில், ஜடேஜா, தனது விரலில் வலி நிவாரணிக்காக பயன்படுத்தப்படும் மருந்தையே பயன்படுத்தினார் என்றும், அவர் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் விளக்கம் அளித்தது. இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதிகளை விதிகளை மீறியதாக ரவீந்திர ஜடேஜாவிற்கு போட்டியின் சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டி நடுவர்களிடம் தெரிவிக்காமல் கை விரலில் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதால் அபாராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 

Share this story