ஜூனியர் உலகக் கோப்பை : பாக். பொறுமை-ஆப்கன் தடுமாற்றம்..ஆடுகள விவரம்..

By 
Junior World Cup Pac. Patience-Afghan stumble..field details ..

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. 

இதில், டிரினிடாட்டில் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

பொறுமையும், தடுமாற்றமும் :

பொறுமையுடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்தது. 

இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. 

தொடக்க வீரர் பிலால் சயிதி அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால், ஆப்கானிஸ்தான் தடுமாடியது. 

ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில், நூர் அகமது மூன்று சிக்சர்களை பறக்கவிட்டு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றார். 

ஆனால், இறுதியில் அவரும் அவுட்டாக, ஆப்கானிஸ்தானின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.

24 ரன்கள் :

முடிவில், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களே எடுத்தது. 

இதன் மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

Share this story