ஜஸ்ட் மிஸ் : நம்ம வினேஷ் போகத் இன்னும் கொஞ்சம் மல்லுக்கட்டி இருக்கலாம்..

Just Miss Our Vinesh may be a little more wrestling to go ..

செம பரபரப்பாக நடைபெற்று வரும் உலக ஒலிம்பிக் திருவிழாவில், மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் இன்று காலை நடைபெற்றன. 

ஒரு போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத்- சோபியா மேக்டலினா (சுவீடன்) மோதினார்கள்.

ஆறு நிமிடம் கொண்ட போட்டியில், முதல் மூன்று நிமிடங்களில் சுவீடன் வீராங்கனையை மடக்கி, வினேஷ் போகத் 2,2,1 என புள்ளிகள் பெற்று 5-0 என முன்னிலை பெற்றார். 

2-வது மூன்று நிமிடங்களில், மேலும் 2 புள்ளிகள் பெற்றார். சுவீடன் வீராங்கனையால், ஒரு புள்ளி மட்டுமே பெற முடிந்தது.

இதனால், வினேஷ் போகத் 7-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில், பெலாரஸ் வீராங்கனை வனேசா கலாட்ஜின்ஸ்கயாவை எதிர்கொண்டார். 

இதில், வினேஷ் போகத் 3-9 என்ற கணக்கில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

Share this story