கோலி, சச்சின், கவாஸ்கர்.. யார் சிறந்த பேட்ஸ்மேன்? :  கவுதம் கம்பீர் ஷாக் பதில்

By 
kam2

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர். இவர் தொடர்பாக அடிக்கடி செய்திகள் வருவது உண்டு. சில நாட்களுக்கு முன்னர் கூட ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டிய சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் பேட்டியில் யாரும் எதிர்ப்பார்க்க முடியாத வகையில் பதில் அளிப்பார். அதுபோன்று தற்போது ஒரு பேட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு பதிலை அளித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

தி படா பாரத் ஷோவில் விவேக் பிந்த்ராவுடன் ஒரு நேர்காணலுக்காக கம்பீர் அமர்ந்திருந்தார். அவரிடம் இந்திய அணி இதுவரை தயாரித்த சிறந்த பேட்ஸ்மேன்கள் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கருத்து கேட்கப்பட்டது.

மேலும், விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயர்களும் வழங்கப்பட்டன. இருப்பினும், கம்பீர் முற்றிலும் மாறுபட்ட பதிலை அளித்தார். அவர் முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கை தனது பதிலாகக் குறிப்பிட்டார்.  

Share this story