கோலியின் கேப்டன் பதவி பறிப்பு? கங்குலி கொடுத்த விளக்கம்..

By 
viratg

நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை என்று முன்னாள் கேப்டனும், முன்ளாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி  தெரிவித்துள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின்   நட்சத்திர வீரராகவும்,  கேப்டனாகவும் வலம் வலம் வந்தவர் விராட் கோலி. இவரது தலைமயிலான இந்திய அணி கடந்த உலகக் கோப்பை போட்டியின்போது வெளியேறி அதிர்ச்சியளித்தது.

இதனால், கோலியின் மீதான கேப்டன்சி மீது விமர்சனம் குவிந்தது. எனவே அவரது கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் அன்று பார்மில் இல்லாதது போன்றவை எல்லாம் சேர்த்து அவர் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில், அன்றைய காலத்தில் பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலிக்கும் விராட் கோலி ராஜினாமாவுக்கும் தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது.

Share this story