கடைசி ஒன்டே மேட்ச் : இந்திய பெண்கள் அணி, இன்று ஆறுதல் வெற்றி பெறுமா?

By 
Last ODI Will the Indian women's team win a consolation match today

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் போராடி டிரா செய்த இந்திய அணி, அந்த அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் அடுத்தடுத்து தோல்வி கண்டு தொடரை இழந்தது. 

இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வார்செஸ்டரில் இன்று நடக்கிறது. 

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில், இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Share this story