"காத்து வாக்குல ஒரு கிஸ்"- விராட்கோலிக்கு, ரசிகை கொடுத்த லிப் லாக்; வைரல் நிகழ்வு..

lip

விளையாட்டு, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகள் புரியும் பிரபலங்களுக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்படுகிறது. அவ்வகையில், ஜூன் 2018-ல் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை நிறுவப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலைக்கு பெண் ஒருவர் முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மெழுகு சிலைக்கு பெண் ஒருவர் முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ இணையத்தின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் கிரிக்கெட் வீரரின் ரசிகர்கள், அந்த பெண்ணை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருகின்றனர்.

அனுஷ்கா ஷர்மாவின் எதிர்வினை குறித்து சிலர் கவலைப்பட்டதாகவும் தெரிகிறது. அவர் கிரிக்கெட் வீரரின் ரசிகை என தெரிகிறது. அவள் மெழுகு சிலையுடன் போஸ் கொடுத்தபடி சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
 

Share this story