உங்கள் திருமணத்தில் கலந்துகொண்டு, ஆட்டம் ஆட காத்திருக்கிறேன் : நடிகர் ஷாருக்கான் சொன்ன ஐபிஎல் வீரர் யார் தெரியுமா? 

By 
sharuk

குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த ஐ.பி.எல். போட்டியில், கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

அந்த அணி வீரரான ரிங்கு சிங், தொடர்ந்து 5 சிக்சர்களை விளாசி அணி வெற்றியடைய உதவினார். இந்த நிலையில், போட்டியில் வெற்றி பெற்ற ரிங்குவுக்காக தனது டுவிட்டரில் சிறப்பு பதிவு போட்ட நடிகர் ஷாருக் கான், அந்த இரவில் ரிங்குவை அழைத்து அவருக்காக ஒரு சிறப்பு செய்தியையும் கூறியிருக்கிறார். 

இதுபற்றி ரிங்கு கூறும்போது, அவர் என்னிடம் உங்களது திருமணம் எப்போது நடைபெறும் என்று பேசினார் என கூறியுள்ளார். அதன்பின் ஷாருக் கான், மக்கள் பலர் அவர்களது திருமணத்திற்கு வரும்படி என்னை அழைக்கின்றனர். 

ஆனால், நான் போவதில்லை. ஆனால், உங்களுடைய திருமணத்தில் கலந்து கொள்வேன். கலந்துகொண்டு ஆட்டமும் போடுவேன் என்று கூறினார் என ரிங்கு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

2018-ம் ஆண்டில் ஐ.பி.எல். போட்டிகளில் அறிமுகம் ஆன ரிங்கு சிங், அதன்பின் ஐ.பி.எல்.போட்டியில் விளையாட அணியில் ரூ.55 லட்சம் ஏல தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளார்.

Share this story