லவ் யூ தலைவா : ரஜினியை சந்தித்த வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி..

By 
varu

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தபட்சம் 1 விக்கெட்டையாவது வீழ்த்தி விடுகிறார்.

அசத்தலாக சுழற்பந்து வீசி வரும் வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்து வருகிறார். சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே 61-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள அவர்,

'வானத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்களை நாம் தினமும் பார்க்கலாம். ஆனால், சூப்பர் ஸ்டாரை பார்ப்பது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். குடும்பத்தில் ஒருவரைப் போல உணர வைக்கும் அளவுக்கு அவர் அன்புடன் பேசினார். லவ் யூ தலைவா" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவருடன் வெங்கடேஷ் ஐயரும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story