ஆட்ட நாயகன் அபிஷேக் சர்மாவுக்கு ஒரு கிலோ தங்கத்தில் மெடல்.?

By 
abi11

சிஎஸ்கே அணிக்கு எதிராக நடந்த 19ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து 37 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மாவிற்கு அணி நிர்வாகம் செயினில் SRH மெடல் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது.

இந்தப் போட்டியில் 308.33 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 37 ரன்கள் எடுத்துக் கொடுத்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அபிஷேக் சர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது கொடுத்துள்ளார்.

முன்னாள் ஜாம்பவான்களான யுவராஜ் சிங், பிரையன் லாரா மற்றும் அபிஷேக்கின் தந்தை ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வாழ்க்கையில் ஆக்ரோஷமான பேட்ஸ்மேனான ஜாம்பவான் யுவராஜ் சிங், வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கி, அபிஷேக்கிற்கு வழிகாட்டியாக பணியாற்றியுள்ளார்.

இதேபோல், எல்லா காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான லாரா, SRH அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த காலத்தில் அபிஷேக்கின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்தார். இந்த நிலையில் தான் போட்டிக்கு பிறகு அபிஷேக் சர்மா கூறியிருப்பதாவது:

பவர்பிளேயில் சிறப்பாக விளையாடி ரன்கள் எடுத்தால் அதன் பிறகு சிறப்பாக விளையாட முடியும் என்பதை முடிவு செய்தோம். அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்பது மனதில் இருந்தது. ஆனால், அதற்குள்ளாக அவுட்டாகிவிட்டேன். அதிரடியாக விளையாடியதற்காக யுவராஜ் சிங், பிரையன் லாரா மற்றும் எனது அப்பா ஆகியோருக்கு ஸ்பெஷலாக நன்றி என்றார்.

இந்தப் போட்டிக்கு பிறகு டிரெஸிங் ரூமில் நடந்த பரிசளிப்பு விழாவின் போது அரைசதம் அடித்த மயங்க் அகர்வால், கடைசியில் சிக்ஸர் அடித்த நிதிஷ் ரெட்டி, பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட அப்துல் சமாத் ஆகியோர் உள்ளிட்ட பலருக்கு கேடயமும், பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.

Share this story