இவ்வளவு திறமைகள் இருந்தும் அவர்கள் பெற்ற வெற்றி என்ன?: இந்திய அணியை விமர்சிக்கும் மைக்கேல் வாகன்..

By 
vakan1

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் மூத்த வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் இளம் பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். ஆவேஷ் கானின் அபாரமான பந்து வீச்சு இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டை வெல்ல உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியிடம் எவ்வளவோ வளம் மற்றும் திறமை இருந்தும் அவர்கள் போதுமான வெற்றியைப் பெறவில்லை என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசியுள்ள அவர் “சமீபகாலமாக இந்திய அணி பெரியளவில் வெற்றிகளைப் பெறவில்லை. திறமைக்குக் குறைவாகவே அவர்கள் விளையாடுகின்றனர்.

அவர்களிடம் இருக்கும் திறமையையும் வளத்தையும் கொண்டு எவ்வளவோ வெற்றிகள் பெற்றிருக்க வேண்டும்.  ஆஸ்திரேலியாவில் இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்றதைத் தவிர சமீபத்தில் அவர்கள் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. கடந்த சில உலகக் கோப்பைகளிலும் அவர்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.” என விமர்சிக்கும் விதமாக பேசியுள்ளார்.

Share this story