மொயின் அலி-ஜோஸ் பட்லர் ரன்மழை : பாகிஸ்தான் வீழ்ந்த கள விவரம்..

By 
Moin Ali-Jose Butler Rain Pakistan Fall Field Details ..

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி லீட்சில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அரைசதம் :
 
அதன்படி, முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 19.5 ஓவரில் 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி 39 பந்தில் 59 ரன்கள் எடுத்தார். மொயின் அலி அதிரடியாக ஆடி 16 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் சார்பில், மொகமது ஹஸ்னன் 3 விக்கெட்டும், இமாத் வாசிம், ஹரிஸ் ராப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் அதிகபட்சமாக ,37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஷதாப் கான் 36 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

ஆட்டநாயகன் விருது :

இறுதியில், பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதனால், 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை1-1 என சமன் செய்துள்ளது.

இங்கிலாந்து சார்பில், சாகிப் மக்மூத்3 விக்கெட்டும், அடில் ரஷீத், மொயின் அலி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது மொயின் அலிக்கு வழங்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி 20 போட்டி நாளை நடைபெறுகிறது.

Share this story