டென்னிஸ் போட்டியில் எம்.எஸ்.டோனி : வைரலாகும் நிகழ்வு..

By 
vairal1

* கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதியில் ஜெர்மனியை சேர்ந்த 12-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார். இதில் அல்காரஸ் 6-3, 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில் காலிறுதியில் அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் சுவரேவ் மோதிய ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனி கண்டு களித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார்.

* கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதுவரை ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கைப்பற்றி உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக ஐதராபாத், கொல்கத்தா 2 முறையும், ராஜஸ்தான், குஜராத் 1 முறையும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் மினி ஏலப்பட்டியலில் ஸ்டார்க் பெயர் இடம்பெறும் பட்சத்தில் அவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இவரை சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவர் 9 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.



 

Share this story