உச்சகட்டத்துக்கு செல்லும் மும்பை இந்தியன்ஸ் பிரச்சனை.. ஹர்திக் பாண்ட்யா செய்த செயல்..

By 
kiki9

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக்கை குஜராத்தில் இருந்து ட்ரேட் செய்யும்போதே அவர் தனக்குக் கேப்டன் பதவி வேண்டுமெனக் கேட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொண்டே மும்பை இந்தியனஸ் அவரை வாங்கியதாகவும் சொல்லப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான உடனே மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கங்களை ரசிகர்கள் அன்பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவு அந்த அணிக்குள்ளேயே சலசலப்பை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரோஹித் ஷர்மாவும் இதுவரை ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சரிடம் இதுபற்றி கேட்கப்பட்ட ஒரு நேர்காணலில் “கேப்டன்சி மாற்றம் ஒரு கிரிக்கெட்டிங் முடிவு. சில சீசன்களில் ரோஹித் சரியாக விளையாடவில்லை. கேப்டன்சி மாற்றத்தின் மூலம் அவரால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியும்.

குடும்பத்துடனும் அதிக நேரம் செலவிட முடியும்” எனக் கூறியிருந்தார். இந்த வீடியோவின் கீழ் பதிவிட்டுள்ள ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா “இதில் பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது ஹர்திக் பாண்ட்யா இப்போது சமூகவலைதளங்களில் ரோஹித் ஷர்மாவை அன்பாலோ செய்துள்ளார். இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this story