ரோகித் சர்மாவை கழற்றிவிட்டு, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் போடும் திட்டம்.?

By 
miii

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிந்த நிலையில், பிளே ஆஃப் போட்டிகள் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதே போன்று, எலிமினேட்டர் சுற்று போட்டி 22 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் மோதும்.

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றார். இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது ஹாட்ரிக் தோல்வியை தழுவிய நிலையில் 4ஆவது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 10 போட்டிகளில் தோல்வியை தழுவி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. வரும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 8 வீரர்களை தக்க வைக்க பிசிசிஐயிடம் ஒவ்வொரு அணியின் உரிமையாளரும் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ரோகித் சர்மாவை அணியின் நிர்வாகம் தக்க வைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

Share this story