42-வது முறையாக ரஞ்சி டிராபியை வென்று மும்பை அணி அசத்தல்.! குவியும் வாழ்த்துகள்..

By 
ranji2

கடந்த சில மாதங்களாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடரின் இறுதி போட்டி மார்ச் 10ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் இந்த போட்டியில் மும்பை அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதை அடுத்து 42 வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற அணி என்ற பெருமையை மும்பை அணி பெற்றுள்ளது 

கடந்த பத்தாம் தேதி ஆரம்பித்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் மும்பை முதல் இன்னிங்ஸ் 224 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 418 ரன்கள் எடுத்தது 

இந்த நிலையில் முதல் இன்னிங்சில் 105 ரன்கள் மட்டுமே எடுத்த விதர்பா அணி வெற்றி பெற 538 என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அந்த அணி 368 ரன்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது 

இதுவரை 41 முறை ரஞ்சி கோப்பையை கைப்பற்றிய நிலையில் இந்த முறை 42 வது முறையாக கைப்பற்றி உள்ளதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Share this story