நல்லா வருவே ராசா, என்னா தன்னடக்கம் : ஷர்துல் தாகூருக்கு, நெட்டிசன்கள் ஸ்பீச்

By 
Nalla Varuve Rasa, Enna Tannadakam To Shardul Tagore, Netizens Speech

பந்துவீச்சு பலவிதம், அதில் தரமான பந்து வீச்சு தனிரகம். அதுதான் இவரிடம்.!

ஆம், சர்வதேச அளவில் தென் ஆப்பிரிக்க மண்ணில் சிறப்பாக பந்துவீசிய 2-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ‌ஷர்துல் தாகூர் பெற்றார். 

வரலாற்றுக் குறிப்பு :

1999-2000-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஆண்டி காட்டிக் 46 ரன் கொடுத்து, 7 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாகும்.

அதற்கு அடுத்தபடியாக, மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹோக்கர்ட் 2004-05-ம் ஆண்டில் ஜோகன்னஸ் பர்க்சில் 61 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். 

‌ஷர்துல் தாகூரும் அவரைப் போன்றே பந்துவீசி, அவருடன் இணைந்து இருக்கிறார்.

சிறந்த நிலையை அடையவில்லை :

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 7 விக்கெட் வீழ்த்தி, சாதனை படைத்தாலும் பந்துவீச்சில் தான் இன்னும் சிறப்பான நிலையை அடையவில்லை என்று ‌ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :

இது எனது சிறந்த பந்துவீச்சுதான். ஆனாலும், நான் இன்னும் சிறந்த நிலையை அடையவில்லை. முகமது ‌ஷமி மற்றும் பும்ரா அணியின் முன்னணி பவுலர்கள் ஆவார்கள். நன்றாக பந்துவீசினார்கள். ஆனால், அதிர்ஷ்டம் அமையவில்லை. 

அவர்கள், தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை கொடுத்தார்கள். அது எனக்கு விக்கெட்டாக அமைந்தது.

டெஸ்டில் விளையாட நான் தொடர்ந்து விரும்புகிறேன். தேர்வு குழுவினரும், அணி நிர்வாகமும் என்மீது நம்பிக்கை வைத்தது. 

இந்தியா போன்ற நாடுகளில் அணியில் இடம்பெறுவது மிகவும் கடினமானது. இதற்கு அதிகளவில் போட்டி இருக்கிறது.

புஜாரா, தற்போது நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறார்' என்றார்.

இதற்கு, நெட்டிசன்கள் ' 'என்னா தன்னடக்கம்.. நல்லா வருவே ராசா.!' என்ற வரவேற்புரைப் பதிவு வைரலாய் தெறித்து வருகிறது.
*

Share this story