காதலியை கரம் பிடித்த நவ்தீப் சைனி: வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடக்கம்..

By 
nav2

இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி தனது நீண்ட நாள் காதலியான ஸ்வாதி அஸ்தனாவை  திருமணம் செய்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் கர்னால் என்ற பகுதியில் கடந்த 1992 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை, ஓட்டுநர், ஹரியானா அரசு அலுவலகத்தில் பணிபுரிந்தார்.

சைனியின் தாத்தா கரம் சிங், ஒரு சுதந்திர ஆர்வலர். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று டி20, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார்.

நவ்தீப் சைனி 11 டி20 போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 13 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதே போன்று 8 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளும், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

2019, ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடைசியாக 2021 ஜூலை 28 ஆம் தேதி இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். 11 டி20 போட்டிகளில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.

2021 ஜனவரி 7 ஆம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சைனி, கடைசியாக ஜனவரி 15 ஆம் தேதி நடந்த ஆஸி அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.2019 டிசம்பர் 22 ஆம் தேதி நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக அறிமுகமான சைனி, கடைசியாக 2021 ஜூலை 23 ஆம் தேதி நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். மொத்தமாக 8 ஒருநாள் போட்டிகளில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.

இதே போன்று ஐபிஎல் தொடர்களில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலும் இடம் பெற்று விளையாடியுள்ளார். இந்த நிலையில் தான் தனது நீண்ட நாள் காதலியான ஸ்வாதி அஸ்தனாவை திருமணம் செய்துள்ளார்.

திருமண புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த நவ்தீப் சைனி, எங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் போது உங்கள் அனைவரின் ஆசிகளையும் அன்பையும் தேடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சைனியின் நண்பர்களான ராகுல் திவேடியா, மொசின் கான், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்பட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Share this story