'அவர் போல' கேப்டன்சியை இனி எந்த கொம்பனாலும் தொட முடியாது : கவுதம் கம்பீர் பேச்சு  

By 
goutam

1983-ம் ஆண்டுக்கு பின் டோனி தலைமையிலான இந்திய அணி மீண்டும் 2011-ம் ஆண்டு தான் உலகக்கோப்பையை வென்றது. அந்த உலகக்கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான வீரர் கவுதம் கம்பீர் தான். 

சேவாக் மற்றும் சச்சின் ஆகியோரின் விக்கெட்டுகள் சரிந்ததும் நிதானமாக விளையாடி இலங்கை அணியை வெளுத்து கட்டியவர் கவுதம் கம்பீர். கடைசியில் டோனி அதிரடியாக ஆட்டத்தை முடித்து இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். 

இதையடுத்து ஒவ்வொரு முறை உலகக்கோப்பையை வென்றது குறித்து பேசும் போதும், தோனி மட்டும் உலகக்கோப்பையை வென்று கொடுக்கவில்லை. கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு. அனைவரும் இணைந்து தான் உலகக்கோப்பையை இந்தியாவுக்காக வென்றோம் என்று பேசி வந்தார். அதுமட்டுமல்லாமல் டோனி மீது ஏராளமான முறை வன்மத்தை வெளிப்படுத்தி வந்தார். 

ஆனால், கடந்த சில நாட்களாகவே கவுதம் கம்பீர் டோனியின் கொள்கை பரப்பு செயலாளர் போல் நடந்து கொள்கிறார். சில நாட்களுக்கு கம்பீர் பேசுகையில், 

கேப்டன்சி பொறுப்பை ஏற்றதன் காரணமாக டோனி தனக்குள் இருந்த பேட்ஸ்மேன் இந்திய அணிக்காக தியாகம் செய்துவிட்டார். அவர் மட்டும் கடைசி வரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி இருந்தால், சர்வதேச கிரிக்கெட் சாதனைகளில் தோனியின் பெயர் அதிகமாக இருந்திருக்கும் என்று கூறினார். 

ஐசிசி உலககோப்பை - அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் எது? கம்பீர், வாட்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கணிப்பு தற்போது தோனியின் கேப்டன்சி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் கவுதம் கம்பீர் பேசி இருக்கிறார். அந்த விவாதத்தில் கவுதம் கம்பீர் பேசுகையில், 

இந்திய கிரிக்கெட்டில் டோனியின் கேப்டன்சியை இனி எந்த கொம்பனாலும் தொட முடியாது. இதுவரை எத்தனையோ கேப்டன்கள் வந்திருக்கிறார்கள். இனியும் வரப் போகிறார்கள். ஆனால் தோனியின் கேப்டன்சிக்கு அருகில் கூட ஒருவராலும் வர முடியாது என்றே நினைக்கிறேன். 

டோனி தனது கேப்டன்சி காலத்தில் மட்டும் 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். இதனைவிட பெரிய வெற்றிகளை எந்த கேப்டனாலும் இந்திய கிரிக்கெட்டில் பெற முடியாது என்று தெரிவித்துள்ளார். 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என்று டோனி மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அவருக்கு பின் இந்திய அணி இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story