யாருமே அப்பீல் செய்யவில்லை – ரன் அவுட்டை இல்லை என்று அறிவித்த நடுவர்; கிரிக்கெட்டில் நடந்த வேடிக்கை..

By 
er4

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வீரர்கள் அல்சாரி ஜோசப்பை ரன் அவுட் செட் போதும் அப்பீல் செய்யாத நிலையில், ரன் அவுட் கொடுக்காத சம்பவம் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்று வெற்றி பெற்ற நிலையில் தொடரானது சமன் செய்யப்பட்டது. அடுத்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 3-0 என்று வென்றது.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. எனினும் கடைசி டி20 போட்டி வரும் 13 ஆம் தேதி நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தான் நேற்று நடந்த 2ஆவது டி20 போட்டியில் மறக்க முடியாத வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 241 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரோவ்மன் பவல் 36 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்திருந்தது. இதில், 2 ஓவர்களில் 53 ரன்கள் தேவை என்ற நிலையில், அல்சாரி ஜோசப் களமிறங்கி இருந்தார்.

போட்டியின் 19ஆவது ஓவரை எதிர்கொண்ட அல்சாரி ஜோசப் பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது ஆஸ்திரேலியா அவரை ரன் செய்தது. ஆனால், ஆஸ்திரேலியா வீரர்கள் அப்பீல் செய்யவில்லை. எனினும், டிவி ரீப்ளேயில் மீண்டும் காட்டப்பட்டது. அதில், அவர் கிரீஸ்க்குள் வராதது தெரிய வந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா வீரர்கள் அம்பயரிடம் முறையிட்டனர்.

அதற்கு நடுவரோ, நீங்கள் யாரும் அப்பீல் செய்யவில்லை. விதிப்படி அவுட் கேட்டால் மட்டுமே அவுட் கொடுக்க வேண்டும் என்று கூறினார். கடைசி வரை அல்சாரொ ஜோசப்பிற்கு அவுட் கொடுக்கவில்லை. எனினும், ஆஸ்திரேலியா வெற்றிப் பாதையில் சென்ற நிலையில் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது.

Share this story