ஒலிம்பிக் நிறைவு விழா : இந்திய அணிக்கு, பஜ்ரங் புனியா தலைமை

By 
Olympic Closing Ceremony Bajrang Punia leads the Indian team

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, இந்த போட்டி சிறப்பாக நடந்து வருகிறது. 205 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி இன்றுடன் ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது. 

கலை நிகழ்ச்சிகள் :

இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் நேற்றுடன் முடிந்து விட்டன. கடைசி நாளான இன்று 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறுகிறது.

போட்டிகள் முடிந்ததும், நிறைவு விழா நடைபெறும். அதில், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. 

பஜ்ரங் புனியா தலைமை :

நிறைவு விழா அணிவகுப்பில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு, மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். 

போட்டி நிறைவு விழா முடிவில், அடுத்த ஒலிம்பிக் போட்டியை (2024-ம் ஆண்டு) நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்படும்.

பதக்கப்பட்டியல் :

தற்போதைய நிலவரப்படி, பதக்கப் பட்டியலில் சீனா 38 தங்கம், 31 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. 

அமெரிக்கா 36 தங்கம், 39 வெள்ளி, 33 வெண்கலம் என 108 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

Share this story