ஒலிம்பிக் டுடே : தமிழக வீராங்கனை இளவேனில், நல்ல வாய்ப்பை இழந்தார்

By 
Olympic Today Tamil Nadu athlete missed a good opportunity in the spring

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி, இன்று காலை 5 மணிக்கு நடைபெற்றது.

இந்தியா சார்பில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 6 சீரிஸ், ஒரு சீரிஸ்க்கு 10 சுடுதல் என மொத்தம் 60 முறை சுடுதல் வேண்டும். 

ஒரு முறை இலக்கை துல்லியமாக சுட்டால் 11 புள்ளிகள் வழங்கப்படும்.

தவறிய வாய்ப்பு :

வாலறிவன் ஒன்று முதல் ஆறு சீரிஸில் முறையே 104.3, 104.0, 106.0, 104.2, 103.5, 104.5 புள்ளிகள் பெற்றார். இவர் பெற்ற மொத்த புள்ளிகள் 626.5  அவரை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல உதவவில்லை.16-ம் இடத்தையே பிடித்தார். முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால், இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார்.

முதலிடம் :

மற்றொரு வீராங்கனை அபூர்வி சந்தேலா ஆறு சீரிஸிலும் சேர்த்து 104.5, 102.5, 104.9, 104.2, 102.2, 103.6 (மொத்தம் 621.9) புள்ளிகள் பெற்று, 36-ம் இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார்.

நார்வே வீராங்கனை ஜீனேட் ஹெக் டியூஸ்டாட் 632.9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். கொரிய வீராங்கனை 631.7 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.

Share this story