ஒலிம்பிக் : விலகிய வீரர்கள் மத்தியில், பங்கேற்கிறார் ஜோகோவிச்..
 

By 
Olympic Djokovic participates among absentees


32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. 

விலகிய வீரர்கள் :

கொரோனா பரவல் காரணமாக, ரசிகர்கள் அனுமதியின்றி கடும் கட்டுப்பாடுகளுடன் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. 

கட்டுப்பாடுகள், காயம் உள்ளிட்ட பிரச்சினை காரணமாக முன்னணி டென்னிஸ் வீரர்கள் ரோஜர் பெடரர், ரபெல் நடால், டொமினிக் திம், வாவ்ரிங்கா, வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ், சிமோனா ஹாலெப், பியான்கா, ஏஞ்சலிக் கெர்பர், விக்டோரியா அஸரென்கா உள்பட பலர் இந்த போட்டியில் இருந்து விலகி விட்டனர். 

பெருமை :

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, 50 சதவீதம் தான் சாத்தியம் இருப்பதாக நம்பன் ஒன் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது தனது முடிவில் மாற்றம் கண்டிருக்கும் அவர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கபோவதாக அறிவித்துள்ளார். 

இது குறித்து, 34 வயதான ஜோகோவிச் தனது டுவிட்டர் பதிவில், ‘நமது நாட்டு அணியுடன் இணைந்து, ஒலிம்பிக் பதக்க வேட்டைக்காக டோக்கியோ செல்வதை பெருமையாக கருதுகிறேன். 

செர்பியா அணிக்காக விளையாடுவது எனக்கு எப்பொழுதும் சிறப்பு மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் அளிக்கும். எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்த எனது சிறந்த திறனை வெளிப்படுத்துவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அரிய சாதனை :

இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் பட்டங்களை தொடர்ச்சியாக வென்று இருக்கும் ஜோகோவிச் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுடன், அடுத்து வரும் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்றால், ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைக்க முடியும். 

இந்த அரிய சாதனையை ஜெர்மனி வீராங்கனை ஸ்டெபி கிராப் (1988-ம் ஆண்டு) மட்டுமே நிகழ்த்தியுள்ளார்.

Share this story