ஒலிம்பிக் போட்டி : குதிரையேற்றம்-கோல்ப் அணியில், இந்திய வீரர்கள் விவரம்

By 
Olympics Equestrian-Golf Team, Indian Athletes Profile

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குதிரையேற்றம், கோல்ப் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்-வீராங்கனைகள் குறித்த பட்டியல் வருமாறு :

* பவுத் மிர்சா - குதிரையேற்ற வீர‌ரான இவருக்கு வயது 29. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1992 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி பிறந்தவர். 

ஆசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள இவருக்கு, இந்திய அரசு அர்ஜூனா விருதும் வழங்கி கவுரவித்துள்ளது. உலக அரங்கில் குதிரையேற்றத்தில் பவுத் மிர்சா பிடித்துள்ள இடம் 78 ஆகும்.

* அனிர்பன் லஹிரி - குழிப்பந்தாட்ட (கோல்ப் )வீர‌ரான இவருக்கு வயது 34. புனேவில் 1987 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி பிறந்தவர். ஆசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள இவர், உலக அரங்கில் 348-வது இடத்தில் உள்ளார்.

* உதயன் மனே - குழிப்பந்தாட்ட வீர‌ரான இவருக்கு, வயது 30. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி பிறந்தவர். 

உலகத் தர வரிசையில், தற்போது 360-வது இடத்தில் உள்ளார்.

* அதிதி அசோக் - குழிப்பந்தாட்ட வீராங்கனையான இவருக்கு, வயது 23 . கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1998 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி பிறந்தவர். 

உலகத் தர வரிசையில், 178-வது இடத்தில் உள்ளார்.

Share this story