ஒரே தங்கப்பதக்கம்; ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மதிப்பு

By 
Only gold medal; Every value in every state

இந்த மாத இறுதியில் தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில், இந்தியாவுக்கான பிரகாசமான பதக்க வாய்ப்புகளில், இரண்டு மல்யுத்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வில்லாளன் அதானு தாஸ்.

தங்கப்பதக்கத்தின் மதிப்பு :

ஒலிம்பிக்கில் பஜ்ரங் தங்கப்பதக்கம்  வென்றால், அவர் தனது மாநிலத்தில் இருந்து ரூ.6 கோடியை ரொக்கப் பரிசாகப் பெறுவார், அதே நேரத்தில், தாஸ் வெறும் ரூ.25 லட்சத்தில் திருப்தி அடைய வேண்டும். 

இந்தியாவில் ஒலிம்பிக் பதக்கத்தின் பண மதிப்பு என்பது, பதக்கம் வென்றவர் எந்த மாநிலத்தில் இருந்து வருகிறார் என்பதைப் பொறுத்தது.

ரூ. 6 கோடி :

பஜ்ரங் புனியாவின்  சொந்த மாநிலமான அரியானா தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.6 கோடி என்றும், வெண்கலம் வென்றால் ரூ .2.5 கோடி என பண விருதுகளை அறிவித்துள்ளது.

ஆனால், வில்லாளன் அதானு தாஸின் மேற்கு வங்காள மாநிலம் ரூ.25 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். என அறிவித்துள்ளது. 

உத்தரப்பிரதேசம்,  ஒடிசா மற்றும் சண்டிகர்  மாநிலமும் தங்கம் வெல்பவர்களுக்கு  ரூ.6 கோடி என அறிவித்துள்ளது. கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலம் ரூ.5 கோடி அறிவித்துள்ளது.

மிகக் குறைவு :

இரண்டு முறை ஆசிய விளையாட்டு போட்டியில், தங்கப் பதக்கம் வென்றவரும் முன்னாள் தடகள வீரருமான ஜோதிர்மோய் சிக்தர், 'மேற்கு வங்காளம் வழங்கும் தொகை மிகக் குறைவு' என கூறியுள்ளார்.

'ஒரு வீரரின் அர்ப்பணிப்பு மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் முயற்சிக்கு எதுவும் தடையில்லை என்றாலும், மாநிலத்திலிருந்து ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருக்கு வழங்கக் கூடிய ரூ.25 லட்சம் தொகை என்பது மிகக் குறைவு. 

பரிசுத் தொகையைப் பொறுத்தவரை, மற்ற மாநிலங்களுடன் சமமாக இருந்தால், வீரர்களை ஊக்குவிக்கும் மற்றும் அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு உறுதி அளிக்கும்' என்றார் சிக்தார்.

Share this story