30 ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு கிடைத்த வாய்ப்பு.. ரசிகர்களை உற்சாகப்படுத்துவோம் : முன்னாள் கேப்டன் உறுதி

By 
Opportunity for Pakistan after 30 years .. Let's cheer the fans Former captain confirmed

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.

2024 முதல் 2031-ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.

வாய்ப்பு :

2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.

கடைசியாக, 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.

நிச்சயம் :

இந்நிலையில், 2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது :

2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. 

இந்த செய்தி, பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் உலக ரசிகர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும். 

நாங்கள் இந்த போட்டியை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி, எங்களது திறமையை வெளிப்படுத்துவோம்' என்றார்.
*

Share this story