விராட்கோலிக்கு, பாகிஸ்தான் வீரர் புகழாரம்..

By 
amir

நடப்பு ஐபிஎல் சீசனின் 65-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இதில் அந்த அணியின் கேப்டன் டுப்ளசிஸ் மற்றும் கோலியின் பங்கு அதிகம். 63 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கோலி மிரட்டினார்.

இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இன்னும் நீட்டிக்கிறது. இந்நிலையில் சதம் விளாசிய விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அமீர் கூறியதாவது, என்ன ஒரு இன்னிங்ஸ், ஒரே ஒரு ரியல் கிங் என பதிவிட்டிருந்தார். இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Share this story