பாராலிம்பிக் டுடே : இந்திய வீரர்களில் கிருஷ்ணா-பிரமோத்,  தங்கம் வெல்வது யாரு?

By 
Paralympic Today Krishna-Pramod, who among the Indian athletes wins gold

 
பாராஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பிரமோத் பகத் :

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகளில், இன்று காலை நடைபெற்ற முதல் அரை இறுதியில், இந்தியாவின் பிரமோத் பகத் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

அடுத்ததாக, இந்திய வீரர் மனோஜ் சர்கார் தன்னுடைய அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்க போட்டிக்கு தகுதி பெற்றார்.  

இதனையடுட்து ஆடவர் எஸ்.எல்.4 பிரிவு ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சுகாஷ் யத்திராஜ் இந்தோனேஷியாவின் ஃபிரட்டியை எதிர்த்து விளையாடினார். 

இந்தப் போட்டியில், சிறப்பாக விளையாடிய சுகாஷ் யத்திராஜ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு பாராஒலிம்பிக் பேட்மிண்டனில் மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.  

கிருஷ்ணாவுக்கு தங்கப்பதக்கம்? :

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற எஸ்.ஹெச் 6 பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர், இங்கிலாந்து வீரர் கூம்ஸ் கிரெஸ்டனை எதிர்த்து விளையாடினார்.  

அதில், 21-10, 21-11 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டு சுற்றுகளையும் கைப்பற்றி, போட்டியை வென்றார். 

இதன் மூலம், இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அவர், இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை (தங்கம் அல்லது வெள்ளி) உறுதி செய்துள்ளார். 

இதனிடையே, இன்று காலை 11.45 மணிக்கு பிரமோத் பகத் மற்றும் பலாக் கோலி இணை கலப்பு இரட்டையர் அரையிறுதியில், இந்தோனேஷியாவின் ஹரி சுசான்டோ-லியானி இணையை எதிர்த்து விளையாட உள்ளது. 

மேலும், இன்று  நடைபெறுகின்ற எஸ்.எல் 3 பிரிவுப் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், இந்தியாவின் பிரமோத் பகத், இங்கிலாந்து வீரர் பெத்தேலை எதிர்த்து விளையாடுகின்றனர்.   
*

Share this story