ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக பெரிய அளவில் விலைபோன பேட் கம்மின்ஸ்; எத்தனை கோடி தெரியுமா?

By 
bad4

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான ஏலம் தற்போது துபாயில் உள்ள கோகோ கோலா அரேனா அரங்கத்தில் நடந்து வருகிறது. ஐபிஎல் சேர்மன் அருண் துமல் தொடக்க உரையாற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதல் முறையாக ஆண்களுக்கான ஐபிஎல் ஏலத்தை மல்லிகா சாகர் நடத்துகிறார்.

இந்த ஏலத்தின் முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரோவ்மன் பவல் ரூ.7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை ரூ.1 கோடி. இதற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ரூ.2.80 கோடிக்கு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஹாரி ஃப்ரூக் ஏலம் எடுக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஃப்ரூக் ரூ.4 கோடிக்கு டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தான் ஒவ்வொருவரும் அதிகம் எதிர்பார்த்த டிராவிஸ் ஹெட்டை ரூ.6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவில் நடந்த 13ஆவது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தவர் டிராவிஸ் ஹெட் தான். இவர் அடித்த சதம் ஆஸ்திரேலியாவை 6ஆவது முறையாக சாம்பியானாக்கியது.

இதன் காரணமாக டிராவிஸ் ஹெட் ரூ.10 கோடிக்கு மேல் வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.6.80 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையில் கடும் போட்டி நிலவிய நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டிராவிஸ் ஹெட்டை தட்டி தூக்கியுள்ளது.

முதல் வீரரையே முத்தான வீரரை ஹைதராபாத் ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து ஆர்சிபி அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டரான வணிந்து ஹசரங்காவை ரூ.1.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இதற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு ஆர்சிபி அணிக்காக விளையாடிய இலங்கை வீரரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.15 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இந்த நிலையில், தான இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையை வென்ற பேட் கம்மின்ஸை ரூ.20.50 கோடி கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு வீரர் 20 கோடிக்கு அதிகமாக ஏலம் எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் சாம் கரண் ரூ.18.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதுவே அதிகபட்ச தொகையாக இருந்துள்ளது.

உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெளிநாட்டு வீரர்கள் இன்றைய ஏலத்தில் எடுக்கப்பட்டுவிட்டனர். எஞ்சிய 3 இடங்களுக்கு இந்திய வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

இந்திய வீரர்கள்:

அப்துல் சமாத், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், சன்வீர் சிங், புவனேஷ்வர் குமார், மாயங்க் அகர்வால், டி நடராஜன், அன்மோல்ப்ரீத் சிங், மாயங்க் மார்கண்டே, உபேந்திரா சிங், யாதவ், உம்பன் மாலிக், நிதிஷ் குமார் ரெட்டி.

வெளிநாட்டு வீரர்கள்:

ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சென், கிளென் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசென், பசல்ஹக் ஃபரூக்கி.

IPL Auction 2024

ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள்:

டிராவிஸ் ஹெட் – ரூ.6.80 கோடி

வணிந்து ஹசரங்கா- ரூ.1.5 கோடி

பேட் கம்மின்ஸ் – ரூ.20.50 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பர்ஸ் தொகை – ரூ.34 கோடி

Share this story