தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து..
Sat, 6 May 2023

கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.
இதற்கிடையே, நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இந்நிலையில், தோஹாவில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஆண்டின் முதல் நிகழ்வு மற்றும் முதல் இடம். நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் எறிந்து தோஹா டயமண்ட் லீக்கில் ஜொலித்தார். அவருக்கு வாழ்த்துகள்! அவரின் முன்னோக்கிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.