பொல்லார்ட் அதிரடி : தெறித்து ஓடியது தென்ஆப்பிரிக்கா..

By 
Pollard Action South Africa splashed ..

வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4-வது 20 ஓவர் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில்  நடந்தது.

அரை சதம் :

முதலில், விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் சிம்மன்ஸ் 47 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர்.

கேப்டன் பொல்லார்ட் அதிரடியாக ஆடினார். அவர் 25 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 168 ரன்கள் இலக்காக கொண்டு தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

60 ரன்கள் :

தொடக்க ஆட்டக்காரர் டி காக் மட்டும் கடைசி வரை போராடினார். அவர் 60 ரன்னில் வெளியேறினார். இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. 

ஆட்ட நாயகன் விருது பொல்லார்டுக்கு வழங்கப்பட்டது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசிப் போட்டி நாளை நடக்கிறது.

Share this story