புரோ கபடி கபடி : இன்றைய ஆட்டத்தில், அசத்தப் போவது யாரு?

Pro Kabaddi Kabaddi In today's game, who is going crazy

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில், பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். 

லீக் முடிவில், முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

தமிழ் தலைவாஸ் அணி :

முதல் நாளான நேற்றிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் மும்பை அணி (யு மும்பா) 46-30 புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது. 

இதைத் தொடர்ந்து, அரங்கேறிய 2-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி 40-40 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

ஜெய்ப்பூர்-குஜராத் :

இந்தத் தொடரில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், தீபக் நிவாஸ் தலைமையிலான ஜெய்ப்பூர் அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது. 

அதைத் தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு  நடைபெறும் போட்டியில் ஜோகிந்தர் நர்வால் தலைமையிலான டெல்லி அணி - புனே அணியை  எதிர்கொள்கிறது. 

இரவு 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், பலம் வாய்ந்த பாட்னா அணியை ஹரியானா அணி எதிர்கொள்கிறது.
*

Share this story