புரோ கபடி கபடி : உ.பி. அணியை, தமிழ் தலைவாஸ் இன்று சாய்க்குமா?

Pro Kabaddi Kabaddi UP Will the Tamil Talawas bend the team today

8-வது புரோ கபடி லீக் போட்டி, பெங்களூருவில் நடந்து வருகிறது. 

இதில், பரபரப்பாக நடந்த லீக் ஆட்டம் ஒன்றில், நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. 

பெங்கால்- பாட்னா அணிகள் :

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 31-28 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. 

மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில், பாட்னா பைரட்ஸ் அணி 31-30 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்சை சாய்த்து 4-வது வெற்றியை தனதாக்கியது. 

தமிழ் தலைவாஸ் :

இன்றைய ஆட்டங்களில், அரியானா ஸ்டீலர்ஸ்-மும்பை (இரவு 7.30 மணி), உ.பி.யோத்தா-தமிழ் தலைவாஸ் (இரவு 8.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

ரசிகர்கள், தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றிச்செய்தியை எதிர்பார்த்து,  வலைத்தளங்களில் ஆர்வமாய் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு இன்றிரவு விடை வரும்.
*

Share this story