புரோ கபடி லீக் : புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது, எந்த அணி தெரியுமா?

Pro Kabaddi League Top favorite in the standings, do you know which team

புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் அணி 6 வெற்றி, 1 தோல்வி, 1 டிரா என மொத்தம் 34 புள்ளிகள் எடுத்து, முதல் இடம் பிடித்துள்ளது.

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

இதில், நடந்த முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே பாட்னா அணி அபாரமாக ஆடியது.
 
இறுதியில், பாட்னா பைரேட்ஸ் 43 - 23 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்தது.

பரபரப்பாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில், சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 40 - 22 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. 

இது, குஜராத் அணி பெறும் 2-வது வெற்றி ஆகும். 
*

Share this story