புரோ கபடியில், தமிழ் தலைவாஸ் ஆட்டம் : நூலிலையில் வெற்றி வாய்ப்பு மிஸ்ஸிங்..

Pro Kabaddi, Tamil Talawas Game Missing a chance to win the book ..

8-வது புரோ கபடி லீக் போட்டிகள், பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. 

இதில், பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குத் தகுதி பெறும்.

முதல் போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட தமிழ் தலைவாஸ் அணி, நூலிழையில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்து, போட்டியை சமனில் முடித்தது. 

இரண்டாவது போட்டியில், பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 30-38 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணி, யு மும்பா அணியை எதிர்கொண்டது. இதில், 30-30 என ஆட்டம் சமனிலையில் முடிந்தது.

மேலும் நடந்த மற்றொரு போட்டியில் யுபி யோதா அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. 

இதில், ஜெய்ப்பூர் அணி 32-29 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.
*

Share this story