புரோ கபடி : தமிழ் தலைவாஸ்-பாட்னா அணிகள் மோதிய சவாலான ஆட்டம்.. களவிவரம்..

By 
Pro Kabaddi Tamil Talawas-Patna teams clash in a challenging match .. Details ..

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி, பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

இதில், நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

30 - 30 புள்ளிகள் :

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில், பாட்னா அணி 18-12 என முன்னிலை பெற்றிருந்தது. இதையடுத்து, இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி சுதாரித்துக் கொண்டு புள்ளிகளைச் சேர்த்தது. 

இறுதியில், தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் இடையிலான ஆட்டம் 30 - 30 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது.

இதன்மூலம் தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றி, ஒரு தோல்வி, 4 டை என 22 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

5-வது வெற்றி :

பரபரப்பாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. 

இதில், சிறப்பாக விளையாடிய பெங்களூரு புல்ஸ் அணி 38 - 31 என்ற புள்ளிக் கணக்கில வெற்றி பெற்றது. இது பெங்களூர் அணி பெறும் 5-வது வெற்றி ஆகும். 
*

Share this story