புரோ கபடி டுடே : டெல்லியை, பெங்கால் அணி இன்று வீழ்த்துமா? வீழுமா?

Pro Kabaddi Today Will Bengal beat Delhi today Will it fall

இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் போட்டியில், பெங்கால் அணி பலம் வாய்ந்த டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. 

நேற்று :

இந்தத் தொடரில், நேற்று நடந்த போட்டியில், புனே மற்றும் பாட்னா அணிகள் மோதின. இதில், பாட்னா அணி 38-26 என்ற கணக்கில் புனே அணியை  வீழ்த்தியது. 

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் யுபி யோதா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது.

இன்று :

புரோ கபடி லீக் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. 

இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், பெங்கால் அணி பலம் வாய்ந்த டபாங் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. 

இதுவரை, இந்த தொடரில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் டபாங் டெல்லி அணி வலுவாக உள்ளது.

அதைத் தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், குஜராத் அணியும் யுபி யோதா அணியும் மோதுகின்றன.
*

Share this story