புரோ கபடி டுடே : பெங்களூரை வீழ்த்தி, தமிழ் தலைவாஸ் இன்று, முதல் வெற்றி பெறுமா?

By 
Pro Kabaddi Today Will Tamil Talawas win for the first time today, beating Bangalore


தமிழ் தலைவாஸ் அணி மோதிய தொடக்க ஆட்டம் சமனில் முடிந்தது. 

2-வது ஆட்டத்தில், இன்று களம் இறங்கும் தமிழ் தலைவாஸ் முதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று ஆட்டங்கள் :

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடந்து வருகிறது.

இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

தமிழ் தலைவாஸ் அணி மோதிய தொடக்க ஆட்டம் (தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக) சமனில் முடிந்தது. 

2-வது ஆட்டத்தில் இன்று களம் இறங்கும் தமிழ் தலைவாஸ் முதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பெங்களூர் அணி தனது முதல் ஆட்டத்தில், யு மும்பை அணியிடம் தோற்றது.

இரவினில் ஆட்டம் :

இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை- தபாங் டெல்லி அணிகளும், இரவு 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில், பெங்கால் வாரியர்ஸ்- குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன.
*

Share this story