புரோ கபடி போட்டி : சாம்பியன் அணியை, உ.பி.அணி வீழ்த்தியது எப்படி? களவிவரம்..

Pro Kabaddi Tournament How Dt The Ubi Team Debut The Champion Team

பரபரப்பாக நடைபெற்று வரும் புரோ கபடியின் திரிலிங்கான ஒரு ஆட்டத்தில், புனேரி பால்டன் அணி 34-33 புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புடன், 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.

விறுவிறுப்பான ஆட்டத்தில் உ.பி.யோத்தா,  முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. இதில், உ.பி. யோத்தா அணி 36-35 புள்ளிக் கணக்கில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்சுக்கு அதிர்ச்சி அளித்தது.

மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில், 34-33 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்சை புனேரி பால்டன் அணி வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில், அரியானா அணியை 40-38 என்ற புள்ளிக்கணக்கில் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.
*

Share this story