தரவரிசையில், கோலியை முந்தினார் ராகுல் : ஐசிசி அறிவிப்பு

Rahul tops goalie rankings ICC

சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

இதில், பேட்ஸ்மேன்களின் தரவரிசையில், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார். 

இங்கிலாந்தின் டேவிட் மலான் 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மார்க்ராம் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
 
இந்திய கேப்டன் விராட் கோலி 8-வது  இடத்துக்கு பின்தங்கினார். மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் ராகுல் 5-வது இடத்துக்கு முன்னேறினார். 
 
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், முதல் 6 இடங்களை சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். 

முதலிடத்தில் இலங்கையின் ஹசரங்கா, 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி, 3-வது இடத்தில் இங்கிலாந்தின் அடில்  ரஷித் நீடிக்கின்றனர்.

ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில், ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்திலும், வங்காள தேசத்தின் ஷகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
*

Share this story