டோனி என்ட்ரியாகும் போது ஒலித்த ரஜினி பட பாடல் : வைரலாகும் நிகழ்வு..

cskdhoni

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டோனி என்ட்ரியாகும் வீடியோ ஓன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 8-வதாக டோனி களமிறங்கினார். அப்போது படையப்பா படபாடல் ஒலித்தது. அதில் குறிப்பிட்ட வரிகள் மட்டும் இடம் பெற்றது.

பாசமுள்ள மனிதனப்பா.. நான் மீசவெச்ச குழந்தையப்பா.. என்றும் நல்ல தம்பி நான் அப்பா.. நன்றியுள்ள ஆளப்பா. தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா. மாலைகள் இட வேண்டாம்.. தங்க மகுடமும் தரவேண்டாம்.. தமிழ் தாய்நாடு தந்த அன்பு போதுமே.. என்ற வரிகள் அதில் இடம் பெற்றது.

அவர் நடந்து வரும் போது ஒலித்த இந்த பாடல் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்றே சொல்லலாம். டோனி டோனி என முழக்கமிட்ட ரசிகர்கள் செல்போனில் டார்ச் லைட் அடித்து காட்டி அவரது வருகையை கொண்டாடினர். இந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்க்க தூண்டுகிறது என ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
 

Share this story