ஐபிஎல் போட்டியை ரஜினி பார்த்திருந்தால் மகிழ்ச்சி என்றிருப்பார்:  டிரெண்டாகும் ரஜினி வாய்ஸ் ..

By 
jey7

ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவின்போது, ரஜினிகாந்த்..

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கொஞ்சம் நல்ல வீரர்களை வாங்கி போடுங்க. காவ்யா மாறன் ரியாக்‌ஷனை பார்த்தாலே நமக்கு டென்ஷனாகுது. காவ்யாவ பார்க்கும்போது நமக்கு பிபி ஏறுது என்பது போன்று பேசியிருந்தார். 

இப்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியை ரஜினிகாந்த் பார்த்திருந்தால், நிச்சயமாக பெருமையாக உணர்ந்திருப்பார். நாம், அன்று ஒரு வார்த்தை சொன்னோம், இப்போது அது நடந்திருக்கிறது என்று உணர்ந்திருப்பார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 8ஆவது லீக் போட்டி ஹைதராபாத்தில் நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

இதையடுத்து, பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா மட்டுமே 64 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷான் 13 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

ரோகித் சர்மா 26 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு நமன் திர் மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில், நமன் திர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 34 பந்துகளில் 2 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Share this story