13-ந்தேதி ரஞ்சி கோப்பை மேட்ச் : 3 புதுமுக வீரர்கள் தேர்வு
 

13-Day Ranji Trophy Match 3 newcomers selected

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி குரூப் ஆட்டங்கள் வருகிற 13-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

தமிழக அணி ‘டி’ குரூப்பில் இடம்பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் சவுராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ரெயில்வே, கோவா, ஜார்கண்ட் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

ரஞ்சி டிராபி போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் சங்கர் கேப்டன் பதவியில் நீட்டிக்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளம் பேட்ஸ்மேன் சாய் சுதர்‌ஷன், ஆல்ரவுண்டர் சரவணகுமார், வேகப்பந்து வீரர் ஆர்.சிலம்பரசன் ஆகிய புதுமுக வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

விஜய்சங்கர் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணை கேப்டன்), பாபா இந்திரஜித், பாபா அபராஜித், ஜெகதீசன், ஷாருக்கான், சாய் சுதர்சன், ரஞ்சன் பவுல், மற்றும்

சூரிய பிரகாஷ், கவுசிக் காந்தி, கங்கா ஸ்ரீதர்ராஜூ, சந்தீப் வாரியர், எம்.முகமது, சிலம்பரசன், சரவணகுமார், அஸ்வின் கிறிஸ்ட், விக்னேஷ், சாய் கிஷோர், மணிமாறன் சித்தார்த், கவின் ஆகியோர் ஆவர்.
*

Share this story