ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் ரிஷப் பண்ட்..

By 
rprp1

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். இந்நிலையில் முன்னாள் வீரரான தீப்தாஸ் குப்தா ரிஷப் பண்ட் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என கூறியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “தோனி ரிஷப் பண்ட்டை சென்னை அணிக்கு அழைத்து வந்தாலும் வருவார். இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். ரிஷப் பண்ட் தோனியை மிகவும் நேசிக்கிறார்கள். இருவர்களது சிந்தனையும் ஒத்திருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

தோனி 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சி எஸ் கே அணியை யார் வழிநடத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this story