ரிஷப் பண்ட் விவகாரம் : கங்குலி சொன்ன கருத்து..

By 
Rishabh Pund affair Ganguly's comment ..

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா, இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியினருக்கு இ-மெயிலில் ஒரு கருத்து அனுப்பியுள்ளார்.

இங்கிலாந்தில் டெல்டா வகை வைரசால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி, இந்த எச்சரிக்கையை அனுப்பியுள்ளார்.

தவிர்க்க வேண்டும் :

ஜெய்ஷா அனுப்பிய இ-மெயிலில் வீரர்கள் நெரிசலான மற்றும் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி பாதுகாப்பை மட்டுமே வழங்கும். வைரசுக்கு எதிராக முழு நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது' என்று தெரிவித்துள்ளார்.

ஜெய்ஷாவின் இந்த கடிதம், விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் யூரோ, சாம்பியன்ஷிப் போட்டியை நேரில் பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிடும் வகையில், அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால், கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலை மீறி, ரி‌ஷப்பண்ட் யூரோ கால்பந்து போட்டியை பார்க்க நேரில் சென்றதாக தெரிகிறது.

சாத்தியமில்லாதது :

இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி கூறும்போது, 
'இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு போட்டிகளை பார்க்க ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் விடுமுறையில் இருந்ததால், அவர் அங்கு சென்றுள்ளார். அனைத்து நேரத்திலும் முகக்கவசம் அணிந்து கொண்டிருப்பது என்பது உடல்ரீதியாக சாத்தியமில்லாதது' என்றார்.

Share this story